தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைப் போலவே குமரி மாவட்டத்திலும் கரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் இறப்பு விகிதமும் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் காவல் துறையினர் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். கரோனா தொற்றால் ஏராளமான காவல் துறையினர் ஏற்கனவே பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதனால் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், குமரி மாவட்டத்தில் உள்ள ’பயோ மைக்ரான்’ எனும் தனியார் மருத்துவ நிறுவனம் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைட்டமின் மாத்திரைகள் இன்று (மே.21) மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணிடம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: இருபதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மூதாட்டி!