ETV Bharat / state

விபத்தில் பலியான மீனவர்களுக்கு கிராமத்தினர் அஞ்சலி

கன்னியாகுமரி: தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Villagers pay tribute to fishermen dies in various accident

author img

By

Published : Nov 6, 2020, 5:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நேற்று நடந்த விபத்தில் பூத்துறை பகுதியைச் சார்ந்த பிரடி என்ற பெரின் (36) மாயமானார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Villagers pay tribute to fishermen dies in various accident
மீனவரகளுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்

இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இனையம் மண்டலத்தைச் சார்ந்த ஏழு மீனவ கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி துறைமுக நுழைவுவாயில் பகுதியில் இருந்து மௌன ஊர்வலமாக சென்றனர். பின்னர், மீன்பிடி துறைமுகத்தின் உட்பகுதியில் இறந்த ஐந்து மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, மலர் தூவி மரியாதை செய்தனர்.

மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்

இந்நிகழ்ச்சியில் பங்கு தந்தையர்கள், மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் மீனவர்கள், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி சீர் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: மாயமான மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.