இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள சோரனூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வேலை பார்த்துவருகின்றனர்.
இவர்கள் நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து தினம்தோறும் வாரம் ஒரு முறையும் தாங்கள் வேலை செய்யும் திருவனந்தபுரம் மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர். ஆனால் நெல்லை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு போதுமான இரவு நேர ரயில்கள் இல்லை.
இதனால் சாலை வழியாக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேருந்துகள் ஏறி திருவனந்தபுரத்திற்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருவுக்கு ஐந்து இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை நாகர்கோவில்-நெல்லை வரை நீட்டித்து இயக்க வேண்டும்.