ETV Bharat / state

சமூக வலைதளங்களை பெண்கள் கவனத்துடன் கையாளவும் - குமரி எஸ்பி அறிவுரை - tiktok

கன்னியாகுமரி: பெண்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை பெண்கள் கவனத்துடன் கையாளவும்!
author img

By

Published : Apr 24, 2019, 11:41 PM IST

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் சமீப காலமாக கைப்பேசி அழைப்புகள், முகநூல், வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம் முன்பின் தெரியாதவர்களை, இளம்பெண்கள் நம்பி ஏமாறுவது வேதனையளிக்கிறது. மேலும், இவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாகவும் புகார்கள் அதிக அளவில் வருகின்றன.

அதனால் பெண்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளும், இளம்பெண்களும் கைப்பேசியை தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்தலாம். அதேவேளையில் கைபேசிகளில் முகநூல், வாட்ஸ்ஆப் மூலம் முன்பின் தெரியாத நபர்களிடம் மாணவிகள் நட்பை ஏற்படுத்தி கொள்வது பாதுகாப்பாக இருக்காது.

இதன் மூலம் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க முடியும்’ என்று கூறினார்.

Intro:Body:

கன்னியாகுமரி: பெண்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் சமீப காலமாக செல்போன் மிஸ்டு கால்கள், பேஸ் புக், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் முன்பின் தெரியாதவர்களை மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் அதிக அளவில் நம்பி ஏமாறும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாகவும் புகார்கள் அதிக அளவில் வருகின்றன. 

அதனால்  பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளும், இளம்பெண்களும் செல்போனை தகவல் தொடர்புக்காக பயன்படுத்தலாம். அதேவேளையில் செல்போன்களில்  பேஸ் புக், வாட்ஸ் அப் மூலம் முன் பின் தெரியாத நபர்களிடம் மாணவிகள் நட்பை ஏற்படுத்தி கொள்ள கூடாது. 

மேலும், பெண்கள் தங்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை  தவிர்க்க வேண்டும். மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் எங்கு சென்றாலும் தங்கள் பெற்றோர்களுடன்  வெளியே செல்ல வேண்டும். 

பெற்றோர்க்கு தெரியாமல் தனியாக சென்று ஆண் நண்பர்களை சந்திப்பதையும், அவர்களுடன் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.