கன்னியாகுமரி: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி வந்தார். இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக நான் இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியில் எனது
பங்கு இருக்கும்.
தமிழக அரசு புயல் நிவாரணங்களை சிறப்பாக கையாண்டது போல் புதுவையிலும் செய்யப்பட்டது. தமிழகத்திற்கு எவ்வளவு சேதமோ அதேபோல புதுச்சேரிக்கும் எதிர்பார்க்கப்பட்டது. புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
சென்னை மேயர் காரில் தொங்கி சென்றது மேயர் விருப்பமா..? அல்லது நேயர் விருப்பமா..? என எனக்கு தெரியவில்லை. அது பற்றி சொல்ல விருப்பமில்லை. தமிழகத்தில் எந்த துறை சிறப்பாக நடந்தாலும் பாராட்ட வேண்டியது அவசியம் தான், ஆனால் தவறை சுட்டி காண்பிப்பது எனது கடமை ஆகும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல பிறமொழி கற்றல் அவசியம்: தமிழிசை சவுந்தரராஜன்