கரோனா தொற்றின் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அன்றாட உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் தினக்கூலித் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த குமரி மாவட்டம், மயிலாடி வடக்கூர் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பொற்செல்வி மற்றும் ஆசிரியைகள் இணைந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதையும் படிங்க:
வெட்டவெளியில் வீசப்பட்ட தரமற்ற அரிசி மூட்டைகள்; வறுமையால் அள்ளிச் சென்ற மக்கள்