ETV Bharat / state

கனல் கண்ணனை திட்டமிட்டு காக்க வைத்ததா காவல்துறை? - குமரியில் இந்து முன்னணியினர் போராட்டம்!

டிவிட்டரில் மத விவகாரம் தொடர்பாக வீடியோ பதிவிட்ட விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசில் ஆஜராக வந்த இந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணனை போலீசார் திட்டமிட்டு 4 மணி நேரம் காக்க வைத்ததாக இந்து முன்னணியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 10, 2023, 5:57 PM IST

கனல் கண்ணனை காக்க வைத்ததாக காவல்துறை?

கன்னியாகுமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார். அதில், கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் காட்சிகளும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் வெளிநாட்டு மத கலாச்சாரம் இது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக ஐ.டி பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டு புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: சாமி சிலையில் இருந்த 6 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை..

சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி கனல் கண்ணனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில், இன்று காலை 10 மணிக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் ஆஜரானார். ஆனால், மதியம் 2 மணி வரை விசாரணைக்கு சம்மன் அனுப்பிய அதிகாரி வரவில்லை எனவும், விசாரணையும் மேற்கொள்ளாமல், உள்நோக்கத்தோடு அவரை வெளியே விடவில்லை எனவும் இந்து முன்னணியினர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போலீசார் கனல் கண்ணனை வெளியே அனுப்பினர். அவர் உணவருந்திவிட்டு வந்த பிறகு மீண்டும் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: சிவகங்கை அரசு பள்ளிக்கு ரூ.1.30 கோடி உதவி.. அள்ளிக்கொடுத்த தொழிலதிபருக்கு குவியும் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.