கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன்.5) நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ’தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள மோசமான சாலைகள் வெகுவிரைவில் சீரமைக்கப்படும். தென்மேற்கு பருவமழை முடிவதற்குள் சாலைகள் அனைத்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அணைகளின நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து