ETV Bharat / state

'வழக்குகளை ரத்து செய்யாவிடில் குமரி வரும் மோடிக்கு கருப்புகொடி' - காங்கிரஸ் எச்சரிக்கை - கருப்புகொடி போராட்டம்

கன்னியாகுமரி: "சென்னை-கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை கேரளாவுக்கு இயக்கியதை கண்டித்து போராட்டம் நடத்தியவரகளின் வழக்கை ரத்து செய்யவில்லை எனில் கன்னியாகுமரி வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும்" என்று குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

கன்னியாகுமரி காங்கிரஸ்
author img

By

Published : Feb 12, 2019, 11:59 PM IST

சென்னை-கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் மறுமார்க்கமாக கேரள மாநிலம் கொச்சி வேலிக்கு இயக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை கொச்சு வேலிக்கு இயக்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு வந்து போராடியவர்களின் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்தனர்.

இதுகுறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "காங்கிரஸ் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யாவிட்டால், குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வரும் போது காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் " என்றார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயிலை கேரளாவுக்கு இயக்கியதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பதிவு ரத்து செய்ய வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. வழக்கை ரத்து செய்யாத பட்சத்தில் குமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Body:கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயில் மறுமார்க்கமாக கேரள மாநிலம் கொச்சி வேலிக்கு இயக்கப்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயிலை கொச்சுவேலிக்கு இயக்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று வந்தனர். பின்னர், " ரயில்வேயில் நடைபெற்ற போராட்டம் பொதுமக்கள் நலன் கருதி நடைபெற்ற போராட்டமாகும். எனவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ". என கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறுகையில், " காங்கிரஸ் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யாவிட்டால், குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வரும் போது காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் " என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.