கன்னியாகுமரி மாவட்டம் அரசு உதவி பெறும் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முலகுமூடு பள்ளியின் இரவு காவலாளியாக ஜான் போஸ்கோ என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
பள்ளி நிர்வாகத்தின் முறைகேடுகளையும், தனது 16 மணி நேரம் பணிச்சுமையும் குறித்து அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவு, கல்வித்துறை அமைச்சர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மதுரை நீதிமன்ற கிளை ஜெனரல் பதிவாளர், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர், கன்னியாகுமரி மாவட்ட கோட்டாட்சியர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் உள்பட 17 பேருக்கு, தான் பாதிக்கப்பட்ட புகார் மனுவை அளித்தார்.
அதன் பேரில் வரும் டிச. 28ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர், பாதிக்கப்பட்ட இரவு காவலாளி, பள்ளி நிர்வாகிகளுக்கு விசாரணையின் பேரில் சம்மன் அனுப்பியுள்ளார். இதனால், பள்ளி நிர்வாகம் நேற்றிரவு (டிச.22) காவலாளி ஜான் போஸ்கோவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக அவர் பள்ளியின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட இரவு காவலாளி ஜான் போஸ்கோவிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும், தக்கலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தால், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டார்.
இதையும் படிங்க: நில ஆக்கிரமிப்பு:முன்னாள் அதிமுக செயலாளர் மீது புகார்!