அமமுக வேட்பாளர் செந்தில் முருகன் சுசீந்திரம், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி, தாணுமாலயன் கோயிலில் சாமிதரிசனம் மேற்கொண்டுவிட்டு இன்று (மார்ச் 25) பரப்புரையில் ஈடுபட்டார். சுசீந்திரம், கற்காடு, தெங்கம்புதூர், அக்கரை போன்ற பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.
பரப்புரையில் அவர் பேசுகையில் , “துறைமுகத் திட்டம் வரவே வராது. எனக்கு போட்டி வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை. நானே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஷ் ஐயர் நீக்கம்