தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரு யுவ கேந்திரா சார்பில் கன்னியாகுமரியில் தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாள்கள் பணிமுன் பயிற்சி முகாம் நடந்தது. கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கிய இம்முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது.
பணிமுன் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கரன், "சமூகப் பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாள்கள் பயிற்சியில் கற்ற விஷயங்களை வாழ்வில் புகுத்தி இளைஞர்கள் செயல்பட வேண்டும்.
இப்பயிற்சி முகாமில் கற்றதைக் கொண்டு இளைஞர்கள், முன்னேற்றப் பாதைக்கு நாட்டை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கையில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
விழாவில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களின் நேரு யுவ கேந்திராவின் உதவி இயக்குநர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார், நிர்வாகிகள் கலைச்செல்வி, ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!