ETV Bharat / state

தரமற்ற உணவு வழங்கல்... அரசு மருத்துவமனையில் உணவகத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் - மாநகராட்சி அதிகாரிகள்

நாகர்கோவிலில் அரசு மருத்துவமணை வளாக உணவகத்தில் தரமற்ற நிலையில் வழங்கப்பட்ட உணவினை சாப்பிட்டதால் நான்கு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவ்உணவகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திமுகவை சார்ந்தவர் நடத்தும் கேன்டினுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு

author img

By

Published : Aug 6, 2022, 11:11 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகேயுள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு உணவருந்த வசதியாக மருத்துவமனை வளாகத்தினுள்ளே அம்மா உணவகம் மற்றும் சில தனியார் உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் பாலாஜி உணவகம் நடத்தி வருகிறார்.

இந்த உணவகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்த யூஜின் தாஸ்(39), வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த அஜீத் (26), ஒழுகினசேரியை சேர்ந்த ஆனந்தராஜ் (31) மற்றும் கடியப்பட்டணத்தை சேர்ந்த பனியடிமை (41) ஆகிய 4 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களை பார்க்க வந்திருந்தனர்.

அதிகாரிகள் சீல் வைப்பு
அதிகாரிகள் சீல் வைப்பு

அப்போது பாலாஜி உணவகத்தில் மீன் சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் நான்கு பேருக்கும் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக அம்மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகர்கோவில் மாநகர அதிகாரி பொறுப்பு ஜான் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ஆல்ரின்,வருவாய் உதவியாளர் முருகன் ஆகியோர் அவ்உணவகத்திற்கு சென்று அங்கு ஆய்வு நடத்தினர்.

சோதனையில் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தரமற்ற முறையிலும், சுகாதாரமற்றதாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தயார் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தையும் மாநகராட்சி வண்டியில் ஏற்றினர்.

இதையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.