ETV Bharat / state

தனிச்சையாக அரசு எடுத்த முடிவே 27 மீனவர்களின் உயிர்பலிக்கு காரணம்... சீமான் - Press meet

தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம், மக்களிடம் கருத்து கேட்காமல், அரசு தனிச்சையாக எடுத்த முடிவுதான் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2022, 8:28 AM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஆக. 20) பார்வையிட்டு, மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர் சந்தித்து பேசிய சீமான்,"தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 27 மீனவர்களை உயிர்பலியாகி உள்ளனர்.

இந்த துறைமுகத்தை கட்டும்போது கடலோடு வாழும் மக்களிடம் கருத்து கேட்காமல், இந்த நிலத்தினுடைய நீரோட்டத்தின் தன்மை, சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் அரசு தன்னிச்சையாக கட்டுமான பணிகளை மேற்கொண்டது.

இதனால், கட்டுமான பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 300 மீட்டர் முகத்துவாரம் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 40 மீட்டர் அளவில் மட்டுமே அது அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், படகுகள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் நம் மீனவர்கள் பலரை நாம் இழக்கும் கொடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள அலை தடுப்பு சுவரை திட்டமிட்டு அன்றே அமைத்திருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல தொடர்ந்து வருகின்ற ஆட்சியாளர்கள் மீனவ மக்களை ஏமாற்றுகிறார்கள். குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றவுடன் இந்த நாட்டையே கொந்தளிக்க செய்தார்கள். ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் நிராகரிக்கப்பட்ட மக்களாக உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

தற்போது அரசு தரப்பில் மறு சீரமைப்புக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகும் கூறுகிறார்கள். எப்போது, மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

ஒக்கி புயலில் கடலில் மிதந்த மீனவர்கள் உடலை கூட எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முன்வராத மத்திய, மாநில அரசுகளால், இந்த விஷயத்தில் மீனவர்களின் நலன் பாதுகாப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது" என்றார்.

இதையும் படிங்க: சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்து காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.