கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூ கட்டும் கலைஞர்கள் நடத்திய பூ அலங்காரப் போட்டி, அங்குக் கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சுமார் 20ஆயிரம் கிலோவில் வித விதமான பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்த பூ அலங்காரத்தைக் காண குமரி, நெல்லை, கேரளா ஆகிய இடங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்தனர்.
புகழ் பெற்ற மலர்ச் சந்தையாகத் திகழ்ந்துவரும் தோவாளை மலர் சந்தையிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் டன் கணக்கில் பூக்கள் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.