கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார், ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று (மே 15) இரவு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் எம்.பி., வசந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, "கன்னியாகுமரியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வேறு மாநிலங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு வரும்போது மாவட்ட எல்லையான, ஆரல் வாய்மொழியில் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இவ்வாறு வருபவர்களை விடுதிகளுக்கு அழைத்துச் செல்ல 10 கார்கள் அல்லது 15 கார்கள் சேர்ந்த பிறகுதான் அனுப்புகிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லை என்று ஏராளமான புகார்கள் எனக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் வருகின்றன.
இதையும் படிங்க... பொருளாதாரத்தை எப்படி மீட்கப் போகிறீர்கள் ? எம்பி வசந்தகுமார் கேள்வி
இதுபோன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் சொந்த ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவித்துவருகின்றனர். அவர்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேனீர் கடைகளை காலை 5 மணி முதல் மாலை 7 மணிவரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். வெளியூர்களில் இருந்து கன்னியாகுமரிக்கு வருபவர்களுக்கு சுத்தமான உணவு, சுகாதாரமான தங்குமிடம், தனித்தனி கழிவறைகள், கூடுதல் சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் வைத்துள்ளோம்" என்றார்.