ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை!

கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மன அழுத்தத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

student
student
author img

By

Published : Sep 12, 2020, 1:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்விளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சீனிவாசன். இவரது மூன்றாவது மகன் சிவனேஷ் (22) மதுரையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பயின்றுவருகிறார்.

ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால் மருத்துவக் கல்லூரியிலிருந்து மாணவன் சிவனேஷ் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.11) வீட்டிற்கு பின்புறம் உள்ள தோப்பிற்குச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தந்தை சீனிவாசன் மகனைத் தேடி தோப்பிற்குச் சென்று தேடியுள்ளார்.

அங்கு 100 அடி ஆழமுடைய கிணற்றில் மாணவன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சுசீந்திரம் காவல் துறை, தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் பிணமாக மிதந்த மருத்துவக் கல்லூரி மாணவன் சிவனேஷ் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மன அழுத்தம் காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவன் சிவனேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவல் துறையினர் நடத்தை விதிகளை கடுமையாகப் பின்பற்ற உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.