கேரளாவிலிருந்து இறைச்சிக் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளைக் கொண்டு வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் கேரள மாநில ஓட்டுநர்கள் கொட்டிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று (அக்.19) மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதியான குழித்துறை, தாமிரபரணி ஆற்றுப்பாலம் முதல் பாலத்தின் இறுதிப் பகுதி வரை இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் கொம்பு, கால்கள் உள்பட எலும்புகளை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
இத்தகவல் தெரிந்து அங்கு சென்ற மார்த்தாண்டம் காவல் துறையினர், மேம்பாலத்தில் வீசிச் செல்லப்பட்ட மாட்டிறைச்சிக் கழிவுகளை காவல் துறை வாகனத்தில் சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் இக்கழிவுகளை தூக்கி வீசிய நபர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கள்ளத்தனமாக இறைச்சி வியாபாரம்: பறிமுதல் செய்த நகராட்சி