கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் அமைக்க, ஜெயலலிதா காலத்திலிருந்து தற்போது வரை தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.
இந்நிலையில் துறைமுகம் வருவதாக ஒரு தரப்பினர் பொய் பிரச்சாரம் செய்து வந்தனர். துறைமுகம் இங்கே அமைந்தால் மீனவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என்றும், எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனை மத்திய அமைச்சரிடம் கோரிக்கையாக அளித்து, அதனடிப்படையில் தற்போது மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகக் கழகம் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக கடிதம் வந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் இதனை வைத்து யாரும் பிரச்சாரம் செய்து ஆதாயம் பெறமுடியாது” என்றார்.
இதையும் படிங்க: 8,000 கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கிய மோடி!