ETV Bharat / state

குமரியில் சுட்டெரிக்கும் வெப்பம்; மழை வேண்டி சிறப்பு வழிபாடு! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: குகநாதீஸ்வரர் கோவிலில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

குமரியில் சுட்டெரிக்கும் வெப்பம்; மழை வேண்டி சிறப்பு வழிபாடு!
author img

By

Published : Apr 1, 2019, 6:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை வர வேண்டும் என்பதற்காக, குகநாதீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

குகநாதீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்:

  • இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பு, இந்த கோவிலை மாதிரி வடிவமாக உருவாக்கியுள்ளார்.
  • இந்த கோவிலில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மிக உயரமாக 5 1/2 உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூல ஸ்தலத்தில் உள்ளது.

  • குமரியில் சுட்டெரிக்கும் வெப்பம்; மழை வேண்டி சிறப்பு வழிபாடு!

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெப்பம். கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து மழை வேண்டி சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெப்பம். கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து மழை வேண்டி சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு அருகே குகநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலை மாதிரி வடிவமாக கெட்டி அமைத்துள்ளார். இந்த கோவிலில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 1/2 உயரத்தில் சிவலிங்கம் மூலஸ்தானத்தில் அமைந்துள்ளது. குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை பிரதிஷ்டை செய்ததால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவிலில் என்ற பெயர் வர காரணமாக உள்ளது என வரலாறுகள் தெரிவிக்கின்றன. இப்படி புகழ்பெற்ற கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பல சிறப்பு பூஜைகளும் வேண்டுதல்களும் பக்தர்களால் அவ்வப்போது நடைபெறுகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்டம் கோடை வெப்பத்தால் பெரிதும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாப்பதும் கோடை வெப்பத்தை குறைக்கவும் கோடை வெப்பத்தை குறைத்து மழை வேண்டியும் கன்னியாகுமரி மாவட்ட சிவபக்தர்களால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும் பகல் 11 மணிக்கு இளநீர் அபிஷேகம் மதியம் அன்னதானம் அபிஷேகம் போன்ற சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.