கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி ஏழூர் அழகியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான திருகார்த்திக்கை தீபம் இன்று நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இக்கோயிலின் சொக்கப்பனை நேற்று மாலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அதற்கு ராஜாக்கமங்கலம் துறை மீனவ மக்கள் சார்பில் மாலை அணிவித்து, பூஜைகள் செய்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் கோயிலின் முன் வைக்கப்பட்ட சொக்கபனையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனிடையே இன்று அதிகாலை 5.45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 42 அடி உயர சொக்கபனையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.