கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தங்க நாற்கரச் சாலைத் திட்டம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தச் சாலை பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவுபெற்று தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது.
இதனைக் குறிக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக நரிக்குளம் பகுதியிலுள்ள பாலத்தின் நடுவே பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கல்வெட்டில் உள்ள மோடியின் உருவப்படத்தை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று சேதப்படுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனாவை எளிதாக எடுத்து கொள்ளாதீர்கள்!