கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயிலில் 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் தொடங்கி மாலை வரை உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
உண்டியல் மூலம் 27 லட்சத்து 72 ஆயிரத்து 18 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இதில் தங்கம் 9 ஆயிரத்து 200 கிராமும், வெள்ளி 182 கிராமும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவிகள், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள், கோயில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் 'அட்சய பாத்திரம்' திட்டம் தொடக்கம்