ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்! - போக்குவரத்து விதி

கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

kஉமரி
author img

By

Published : May 3, 2019, 5:00 PM IST

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்களை தான் பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் குமரிக்கு அதிகபடியான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே அவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பதற்காக குமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

அதில் கன்னியாகுமரி மாவட்ட டிஎஸ்பி பாஸ்கரன் கலந்துகொண்டு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஆட்டோ ஓட்டுகையில் விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் போக்குவரத்து விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து போலீஸார் கலந்துகொண்டனர். மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

Intro:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஆட்டோ டிரைவர் களுக்கான விழிப்புணர்வு முகாமினை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

Body:சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஆட்டோ டிரைவர் களுக்கான விழிப்புணர்வு முகாமினை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் சுற்றுலா பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்கு பெருமளவில் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கன்னியாகுமரி அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர்களின் அலட்சியத்தால் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன .கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும் சிறுசிறு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன .இதனை தடுக்கும் விதத்தில் சுற்றுலாத் தலத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் உள்ள ஒய்எம்சிஏ மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமிற்கு கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமை வைத்து ஆட்டோ டிரைவர்கள் என பலவிதமான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆட்டோ ஓட்டும் போது விழிப்புணர்வும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். அதிக பயணிகள் ஆட்டோவில் ஏற்றக்கூடாது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம் .உங்களுக்கும் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி நீங்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் .போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என பலவிதமான ஆலோசனைகள் வழங்கினார். இம்முகாமில் போக்குவரத்து போலீசார் உட்பட கன்னியாகுமரி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுற்றுலா பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அதிகப்படியான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.