ETV Bharat / state

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு - ஈடிவி செய்திகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி, தோவாளை உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

author img

By

Published : Apr 4, 2021, 4:15 PM IST

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் தோவாளை ஒன்றிய பகுதிக்குட்பட்ட தடிக்காரன்கோணம், எட்டாமடை, பூதப்பாண்டி, தோவாளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

இதையடுத்து, வேட்பாளர் செல்லும் இடங்களில் மக்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், பிராங்ளின் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட பலரும் சென்றனர்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைந்ததும் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.

தேர்தல் பரப்புரையின் போது தெரிசனங்கோப்பு பகுதியில் அமமுக நிர்வாகிகள் பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெருங்குறையுடன் தேர்தலை புறக்கணிக்கும் குருங்குளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.