கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாதிகளால் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் களியக்காவிளை காவல்நிலையம் முன்பு தொடங்கி மார்த்தாண்டம் வரை நடைபெற்றது. இதில், இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் கலந்து கொண்டு கருப்பு கொடி கட்டி ஊர்வலமாக வந்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தை களியக்காவிளை காவல் துறையினர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க:
வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவல்