ETV Bharat / state

கன்னியாகுமரியில் காங்கிரஸ் பிரமுகர் கைது! - 2019 Paralimentary election

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே 500 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து விநியோகித்த காங்கிரஸ்  பிரமுகரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் பிரமுகர் கைது
author img

By

Published : Apr 11, 2019, 12:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், களியல் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (32). இவர்,நேற்று (ஏப்.10) பிணந்தோடு பகுதியிலுள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு, 500 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளார்.

அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த ஊழியர், அது கள்ள நோட்டு என்று தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ரதீஷை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜ் என்பவரிடம் வெல்டிங் வேலைக்கு சென்றதாகவும், அவர் அந்த ரூபாய் நோட்டை சம்பளமாகக் கொடுத்தாகவும், ரதிஷ் காவல் துறையினரிடம் கூறினார்.

கன்னியாகுமரி
காங்கிரஸ் பிரமுகர் கைது

இந்த விவகாரத்தை தக்கலை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தனிப்படையினரிடம் ஒப்படைத்தார். தனிப்படையினர், அந்த காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜை பிடித்து விசாரித்தபோது, திருவட்டாறு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் லேபில், கணினி, பிரிண்டர் உள்ளிட்டவைகளை வைத்து போலி 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அதனை வினியோகித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை அச்சடிக்கப் பயன்படுத்திய மின்சாதன பொருட்களை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும், காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜை கைது செய்து, அவரிடமிருந்து கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜார்ஜிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அவருக்கும், வேறு கள்ள பணம் அச்சடிக்கும் கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற ரீதியில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கன்னியாகுமரி:  குமரி அடுத்த குலசேகரம் அருகே 500 ரூபாய்நோட்டுகளை போலியாக அச்சடித்து விநியோகித்த  காங்கிரஸ் பிரமுகரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றன்.

கன்னியாகுமரி மாவட்டம், களியல் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் 32.இவர்,நேற்று பிணந்தோடு பகுதியிலுள்ள  பெட்ரோல் பங்கில்பைக்குக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு, 500 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளார்.

அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த பங்க் ஊழியர், அது கள்ள நோட்டு என்று தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,  ரதீஷை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஆற்றூர் பகுதியை  சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜ் என்பவரிடம் வெல்டிங் வேலைக்கு சென்றதாகவும்அவர்  அந்த ரூபாய் நோட்டை சம்பளமாக கொடுத்தாக, ரதிஷ் போலீசாரிடம் கூறினார்.

இந்த விவகாரத்தை தக்கலை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தனிப்படையினரிடம் ஒப்படைத்தார்தனிப்படையினர், அந்த காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜை பிடித்து விசாரித்தனர். அப்போது திருவட்டாறு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் லேபில்கணினிபிரின்டர் உள்ளிட்டவைகளை வைத்து போலி 500பிரூபாய் நோட்டுகளை அச்சடித்து அதனை வினியோகித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை அச்சடிக்கப் பயன்படுத்திய மின்சாதன பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும்  காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

ஜார்ஜிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அவருக்கும் வேறு கள்ள பணம் அச்சடிக்கும்  கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.