ETV Bharat / state

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நிராகரிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை!

Kalaignar Magalir Urimai Thogai: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கவில்லை என கூறி ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 8:57 PM IST

பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை..!

கன்னியாகுமரி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெற குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், தகுதி உடையவர்களின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் கைபேசிக்கும் நிராகரிக்கப்பட்ட காரணத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள், மீண்டும் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறுஞ்செய்திகள் வராத ஏழை, எளிய பெண்கள் ஏராளமானவர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் இன்று (செப்.19) திரண்டனர். பணியில் இருந்த ஊழியர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, கணினி உதவியுடன் ஆன்லைனில் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இதனிடையே உதவி மையங்களில் இண்டர்நெட் சேவை திடீரென தடைபட்டதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களின் விபரங்களைக் கேட்டு ஒரு நோட்டில் ஊழியர்கள் பதிவு செய்து கொண்டனர். அதற்காக அவர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர்.

அங்கு அமர்ந்து இருந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள், தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றும், கார் வைத்திருக்கும் நபர்கள், நான்கு வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் என வசதி படைத்தவர்களுக்கு எல்லாம் உரிமைத் தொகை வந்துள்ளதாகவும், ஏழை எளிய பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பன சூழல் நிலவியது. இதேபோல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகா அலுவலங்களிலும் மற்றும் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகிய அலுவககங்களில் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியது.

இதையும் படிங்க: "பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி” - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.