கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் புதிதாக கட்டப்பட்டுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவைகளின் திறப்புவிழா நடந்தது. இந்த நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜகதீஷ் சந்திரா திறந்துவைத்தார்.
பின்னர் பேசிய நீதிபதி ஜகதீஷ் சந்திரா, "டெல்லியில் நடந்தது போல் இனி நிகழக் கூடாது. வழக்கறிஞர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடமால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து நாகர்கோவிலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தபால் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "தனியார் கொரியர் பயன்பாட்டைவிட அரசின் கீழ் இயங்கும் தபால் நிலையங்களின் சேவை சிறப்பானது. அதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கோமதி நாயகம், தலைமை கூடுதல் நீதிபதி அருணாச்சலம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதையும் படியுங்க: