ETV Bharat / state

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறு - அமைச்சர் எம்.சி சம்பத் - India's economy

கன்னியாகுமரி: மத்திய அரசின் நடவடிக்கையால்தான் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து என தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் MC சம்பத்
author img

By

Published : Sep 14, 2019, 7:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் "வீட்டுக்கொரு தொழில் முனைவோர், கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் " கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர், எம்.சி.சம்பத், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறு - அமைச்சர் MC சம்பத்

பின்னர் அமைச்சர் எம்.சி சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி குறித்து மாதம்தோறும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால் மத்திய அரசின் நடவடிக்கையால்தான் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து. உலக முதலீட்டாளர் மாநாட்டால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளும், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், 41 முதலீட்டாளர்கள் மூலம் 8 ஆயிரத்து 435 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தொழில் வளர்ச்சி குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் தொழில் தொடங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது. மேலும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் தமிழ்நாட்டில் படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்கிறது” என்றார்.

Intro:கன்னியாகுமரி: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் 41 முதலீட்டாளர்கள் மூலம் 8 ஆயிரத்து 435 கோடி தமிழகத்திற்கு வந்துள்ளது என்று தமிழக தொழிற்துறை அமைச்சர், எம்.சி.சம்பத் நாகர்கோவிலில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார். Body:குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் "வீட்டுக்கொரு தொழில்முனைவோர், கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் " கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழக தொழிற்துறை அமைச்சர், எம்.சி.சம்பத்., தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவினை தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் எம் சி சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து மாதம்தோறும் தமிழக முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. உலகளாவிய அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. அதனால் மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து.
உலக முதலீட்டாளர் மாநாட்டால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் 3 லட்சத்தி 431 கோடி ரூபாய் முதலீடும் தமிழகத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் 41 முதலீட்டாளர்கள் மூலம் 8 ஆயிரத்து 435 கோடி வந்துள்ளது.

தொழில் வளர்ச்சி குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. தினந்தோறும் வளர்ச்சி குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் துவங்க முன் வருபவருக்கு விண்ணப்பித்த இருபது நாட்களில் தொழில் துவங்க அனைத்து நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் தமிழகத்தில் படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.