ETV Bharat / state

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 மிகப் பெரிய சாதனை: நாசா விஞ்ஞானி!

கன்னியாகுமரி: சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 2 மிகப்பெரிய சாதனை என்று நாசா விண்வெளி வீரர் டொனால்டு ஏ. தாமஸ் தெரிவித்துள்ளார்.

டொனால்டு ஏ. தாமஸ்
author img

By

Published : Aug 31, 2019, 7:58 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நாசா முன்னாள் விண்வெளி வீரர், விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் தனது விண்வெளி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், மாணவ மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 மிகப் பெரிய சாதனை

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறியதாவது, "சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 2 மிகப்பெரிய சாதனை. விரைவில் சந்திரனில் சந்திரயான் 2 கால் பதிக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் விண்வெளியில் சுற்றுலா தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் விண்வெளியில் மனிதன் வாழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உலக நாடுகள் அனைத்துமே விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன. முதலில் யார் கால் பதிக்கிறார்கள் என்ற போட்டி மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் போட்டி, பொறாமைகளுக்கு இதில் இடமில்லை" என்று கூறினார்.

Intro:கன்னியாகுமரி: சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்-2 மிகப்பெரிய சாதனை என்று நாசா விண்வெளி வீரர் டொனால்டு ஏ. தாமஸ் தெரிவித்துள்ளார்.

Body:குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில் நாசா முன்னாள் விண்வெளி வீரர் மற்றும் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் தனது விண்வெளி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர் மாணவ மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறியதாவது:
சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்-2 மிகப்பெரிய சாதனை.
விரைவில் சந்திரனில் சந்திராயன் 2 கால் பதிக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் விண்வெளியில் சுற்றுலா தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது .
அடுத்த 25 ஆண்டுகளில் விண்வெளியில் மனிதன் வாழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உலக நாடுகள் அனைத்துமே விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன. முதலில் யார் கால் பதிக்கிறார்கள் என்ற போட்டி மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் போட்டி பொறாமைகளுக்கு இதில் இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.