ETV Bharat / state

கட்சியும், சாதியும் வேண்டாம் - மனித நேயத்தை காக்கும் கிராம மக்கள் !

கன்னியாகுமரி : கட்சி கொடிகளை அறவோடு வெறுக்கும் கிராம மக்கள் சாதி, மத பேதமின்றி 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

73 independence day
author img

By

Published : Aug 15, 2019, 5:47 PM IST

Updated : Aug 15, 2019, 7:05 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே அமைந்துள்ளது லட்சுமிபுரம் கிராமம். இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தினுள் எந்தவிதமான கட்சி கொடிகள் கட்டுவதற்கும், கட்சி கொடி கம்பங்கள் நிறுவதற்கும், கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தடை விதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கிராமத்திற்குள் அரசியல் பேசக் கூடாது என்றும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதசார்மின்மையை போற்றும் இந்த கிராமக்கள் ஊரின் நடுவே தேசியகொடி கம்பம் நிறுவி 73ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இதில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.

லட்சுமிபுரம் கிராம மக்கள் கொண்டாடிய சுதந்திர தின விழா

இதில் இயற்கை விஞ்ஞானி லால்மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடி கம்பம் முன்பு கிராம மக்கள் அனைவரும் நின்று சாதி, மத வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.கட்சி கொடிகளே இல்லாத வித்தியாசமான இந்தக் கிராம மக்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கட்சி கொடி மற்றும் கொடி கம்பங்கள் சங்கங்கள் என அனைத்தும் கிராமத்திற்க்குள் வைக்க தடை விதித்து தேசிய கொடி கம்பம் மட்டுமே நிறுவியுள்ள வித்தியாசமான லட்சுமிபுரம் கிராமத்தில் சுதந்திர விழாவினை கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.Body:tn_knk_02_independenceday_different_village_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கட்சி கொடி மற்றும் கொடி கம்பங்கள் சங்கங்கள் என அனைத்தும் கிராமத்திற்க்குள் வைக்க தடை விதித்து தேசிய கொடி கம்பம் மட்டுமே நிறுவியுள்ள வித்தியாசமான லட்சுமிபுரம் கிராமத்தில் சுதந்திர விழாவினை கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அமைந்துள்ளது லட்சுமிபுரம் கிராமம். இங்கு சுமார் 1500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தின் உள்ளே எந்தவிதமான கட்சி கொடிகள் கட்டுவதற்க்கும் கட்சி கொடி கம்பங்கள் சங்கங்கள் வைப்பதற்க்கும் நிறுவதற்க்கும் கடந்த பத்து ஆண்டுகளாக இக்கிராம மக்கள் தடை விதித்துள்ளார்கள். மேலும் கிராமத்திற்க்குள் அசியல் பேச கூடாது எனவும் கட்டுபாடும் போடப்பட்டுள்ளது. மேலும் கிராம மக்களின் மதசார்மின்மையை விளக்கும் வகையில் கிராமத்தின் நடுவே தேசியகொடி கம்பம் நிறுவியுள்ள கிராம மக்கள் ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றுவார்கள். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 73 வது சுதந்திர தினம் கொண்டாட படுவதையொட்டி லட்சுமிபுரம் கிராமத்திலும் சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் முதியவர்கள் பெண்கள் என அனைத்து கிராம மக்களும் தேசிய கொடி நிறுவப்பட்டுள்ள கிராமத்தின் மைய பகுதிக்கு வந்தனர். பின்பு இயற்கை விஞ்ஞானி லால்மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய கொடி கம்பம் முன்பு கிராம மக்கள் அனைவரும் நின்று சாதி மத வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றார்கள். சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. கட்சி கொடிகளே இல்லாத வித்தியாசமான கிராமத்தில் கிராம மக்கள் சுதந்திர தினம் கொண்டாடியதை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.
Conclusion:
Last Updated : Aug 15, 2019, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.