கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த சியாம் என்பவர் தனது மனைவி சுஷ்மா தீபாவளி விடுமுறையொட்டி நாகர்கோவிலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் நேற்று (அக். 29) காளிகேசத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது சுஷ்மா தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை கண்ட சியாம் அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார்.
இதனிடையே அருகேலிருந்த ரப்பர் தோட்ட தொழிலார்கள் சுஷ்மாவை உயிருடன் காப்பற்றினர். ஆனால், சியாம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட தகவலில் சியாம் சென்னையில் ஐ.டி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த சுஷ்மா என்பவருக்கும் 8 மாதங்களுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே குளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு