இந்து ஆலயங்களில் "துவஜஸ்தம்பம்" எனப்படும் கொடிமரங்கள் மிகவும் புனிதமானவை. ஒரு ஆலயத்தை முழுமையடையச் செய்வது ஆலயத்தின் கொடி மரம் தான் என்பது ஐதீகம்.
அந்த அடிப்படையில் கோயில்களில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டம் கரும்பாட்டூர் ஶ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில் 37 அடி உயர புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் கரும்பாட்டூர் ஶ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் 37 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் இன்று (அக்.31) ஊர்மக்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.