குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை சற்று உயரும். தற்போது குமரியில் கோயில் திருவிழாக்கள் மற்றும் கொடை விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கேரளா மற்றும் குமரி வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்குவதற்கு முகாமிட்டுள்ளனர்.
பூக்கள் விலை விவரம்:
ரூ.150-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.400-ஆக உயர்ந்துள்ளது.
ரூ. 400-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ. 500-ஆக உயர்ந்துள்ளது.
ரூ.100-க்கு விற்கப்பட்ட முல்லை பூ ரூ.300-ஆக உயர்ந்துள்ளது.
ரூ.80-க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.140-ஆக உயர்ந்துள்ளது.
ரூ.100-க்கு விற்கப்பட்ட மரிக்கொழுந்து ரூ. 150-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ரோஜா பூ ரூ.100-ஆகவும், கனகாம்பரம் பூ ரூ.400-க்கும் விற்கப்பட்டு வருகிறது. திருவிழாக் காலம் என்பதால் வியாபாரிகளும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்கின்றனர்.