கன்னியாகுமரி மாவட்டம் களியல் ஆலஞ்சோலையில் தனியார் ரப்பர் தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ரப்பர் மரங்களும், ரப்பர் சீட்டுகளை உலர வைக்க ரப்பர் உலர் ஆலையும் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனைப் பார்த்த ரப்பர் தோட்ட காவலாளி குலசேகரம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ பரவியதால் குழித்துறையில் உள்ள தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு இரண்டு வாகனங்களிலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
உலர் ஆலையில் 5000 க்கும் மேற்பட்ட ரப்பர் சீட்டுகள் உலர வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை அனைத்தும் தீயில் எரிந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் தீப்பற்றிய ஆம்னி வேன்...