சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இன்று யோகா செய்து புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் பாஜக தொண்டர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். அவர் வழக்கமாக மேற்கொள்ளும் யோகாசனங்களை சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக செய்தார்.
இதையும் படிங்க:கடினமான யோகா செய்து அசத்திவரும் முதியவர்!