மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த சுக்குபாறைதேரிவிளையில் உள்ள எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிற்கான டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த உணவான மீன்குழம்புடன் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.