கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அடுத்த சங்கரலிங்கபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் மயிலாடியில் உள்ள மின்வாரிய ஊழியர் ஒருவருக்கு உதவியாளராக மின்வாரிய பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அருள் மயிலாடி அடுத்த உள்ள அமராவதிவிளையில் உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணியில் மின்வாரிய ஊழியருடன் பணியில் ஈட்டுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருளின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் உடல்பகுதிகள் கருகிய நிலையில் அருள் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அருளை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.