ETV Bharat / state

தொடர் மழையால் ரப்பர் தொழில் கடும் பாதிப்பு!

மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் இரண்டாவது நாளாக ரப்பர் பால் வடிக்கும் தொழிலில் நாளொன்றுக்கு சுமார் ரூ.50 லட்சம் வர்த்தகம் முடங்கியுள்ளது.

தொடர் மழையால் ரப்பர் தொழில் கடும் பாதிப்பு!
தொடர் மழையால் ரப்பர் தொழில் கடும் பாதிப்பு!
author img

By

Published : Oct 17, 2022, 4:50 PM IST

கன்னியாகுமரியில் நெல்,தேங்காய் விவசாயத்திற்க்கு அடுத்தபடியாக முக்கிய விவசாயமான ரப்பர் விவசாயம் சுமார் 25000 ஹெக்டர் பரப்பளவில் நடைபெற்றுவருகிறது. இதில் அரசு ரப்பர்கழகம் மூலம் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பரப்பளவில் ரப்பர் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 250 டன் ரப்பர் உற்பத்தி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு , குற்றியாறு பகுதிகளிலும் குலசேகரம் , கடையாலுமூடு , ஆறுகாணி , ஆலஞ்சோலை , களியல் , அருமனை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் இரண்டாவது நாளாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கபட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தில் சுமார் 50000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால்வடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் கனமழையால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் ரப்பர் தொழில் கடும் பாதிப்பு!

இதையும் படிங்க:அதிமுகவின் பொன்விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.