ETV Bharat / state

திருமணம் நடத்த அனுமதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் திரளும் மக்கள்

கன்னியாகுமரி: திருமணம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

crowd of people asking for permission to get married

author img

By

Published : Aug 13, 2020, 2:01 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகள் தடை செய்யப்பட்டன. குறிப்பாக, திருமண மண்டபங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

ஊரடங்கு ஐந்து மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இன்னும் திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், சமீபத்தில் அரசு அறிவித்த உத்தரவின்படி அனுமதி பெற்று தகுந்த இடைவெளியுடன், குறிப்பிட்ட நபர்களுடன் திருமணம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம் நடத்த விரும்புவோர் அதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாவட்டத்தில் திருமணம் நடத்த அனுமதி கேட்டு ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். இதற்காக அலுவலக நுழைவு வாயிலில் இரண்டு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அலுவலர்கள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டு அதனை விசாரித்து அனுமதி கடிதம் வழங்கி வருகின்றனர்.

திருமணம் நடத்துவதற்கு தற்போது ஒருசில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தினமும் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று திருமணம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.