ETV Bharat / state

கன்னியாகுமரியில் தம்பதி தற்கொலை - போலீசார் விசாரணை - crime news in kanniyakumari

கன்னியாகுமரியில் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பதியர்களின் தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா? முறை தவறிய காதலா? - போலீசார் விசாரணை

author img

By

Published : Jul 1, 2022, 10:15 PM IST

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே சூரியகோடு முளங்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜான்சன் (40) - சந்தியா (34) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை. சந்தியா தட்டான்விளையைச் சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது மகன் ஆன்ட்ரோ பிரபிளின் என்பவரை திருமணம் செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆன்ட்ரோவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 30 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், ஆன்ட்ரோ பிரப்ளின் நேற்று (ஜூன் 30) மாலை தனது தாயாருடன் சந்தியாவின் வீட்டுற்கு வந்து பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஜான்சன், சந்தியா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் சந்தியாவின் போனிற்கு அழைத்தபோது, அழைப்பை ஏற்காததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டியிருந்துள்ளது. எனவே ஜன்னல் வழியாக வீட்டினுள்ளே பார்த்தபோது சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகிலுள்ள கட்டிலில் ஜான்சன் விஷமருந்திய நிலையிலும் இருந்துள்ளனர்.

உடனடியாக அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பதி உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமாகி ஆறு மாதங்களில் தற்கொலை செய்த இளம்பெண் - கணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.