கன்னியாகுமரி: கட்டுமான தொழில் பொறியாளர் சங்கத்தினர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பணிகளுக்குத் தேவையான கருங்கல், சல்லி, எம் சாண்ட் போன்றவை கடந்த மூன்று மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கட்டுமான பொருட்களை கொண்டு வரும் நிலை ஏற்பட்டதால் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட மதிப்பீடுகளில் கட்டுமான பணிகள் செய்ய முடியாமல் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், 250-க்கு மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல அண்மைக் காலமாகவே சிமெண்ட் ஸ்டீல் ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனையும் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைத்து கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை விலை நிர்ணயம் செய்து தட்டுப்பாடு இல்லாமல் அரசு வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கையுடன் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: உலக புலிகள் தினம் - பொள்ளாச்சி அருகே விழிப்புணர்வு பேரணி