தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே கன்னியாகுமரி மாவட்ட மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் படைவீர்கள்,விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற காவல்துறையினர், இளநிலை படை அலுவலர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி காவல் நிலையத்திலோ விருப்ப விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் எனவும், பணி முடிந்தவுடன் ஊதியம் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பாதுகாப்பு பணி- துணை ராணுவம் சேலம் வருகை!