ETV Bharat / state

தமிழ்நாடு அரசைக்கண்டித்து பாஜக எம்எல்ஏ உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசைக் கண்டித்து வரும் டிசம்பர் 11ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக நாகர்கோவில் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். காந்தி அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 10, 2022, 6:22 PM IST

கன்னியாகுமரி : நாகர்கோவில் பாஜக அலுவலகத்தில் இன்று (நவ.10) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பின்போது நாகர்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். காந்தி, 'இந்து ஆலயங்கள் அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் அமைக்க உத்தரவு உள்ளது. வேணுகோபால் கமிஷன் அறிக்கையைப் பொருட்படுத்தாமல், பல தேவாலயங்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

காவல் துறை பாதுகாப்போடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்படுகிறது. அனுமதி பெறாமல் பல இந்து ஆலயங்களை புனரமைக்கும்போது, அனுமதி உள்ளதா என கேள்வி கேட்கிறார்கள். இந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேணுகோபால் கமிஷன் அறிக்கையை மீறி, பல வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.

மக்கள் மன அமைதியோடு வாழ வழிபாட்டுத்தலங்கள் தடையாக அமையக்கூடாது. புதிய வழிபாட்டுத்தலங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதை மாவட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் மற்றும் தலைமைச்செயலர் இருவரையும் சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை நேரம் தரவில்லை.

எனவே, வரும் டிசம்பர் 11ஆம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளேன். இந்த சமூக நல்லிணக்க உண்ணாவிரதத்தில், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை கருத்தை திரும்பப்பெற்றார் சதீஷ் ஜார்கிஹோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.