ETV Bharat / state

பகவதி அம்மன் கோயில் நவராத்திரி விழா - ஒரு டன் பூக்கள் தூவி இலங்கை பக்தர்கள் வழிபாடு ! - கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழா

கன்னியாகுமரி: அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 5ஆம் நாளில் இலங்கை பக்தர்கள் ஒரு டன் அளவிலான ஐந்து வகை மலர்களை தூவி வழிபட்டனர்.

navrathiri
author img

By

Published : Oct 4, 2019, 10:01 AM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு பிரசித்திபெற்ற கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா செப்டம்பர் 30ஆம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

விழாவின் 5ஆம் நாளான நேற்று அம்மன், வெள்ளி காமதேனு வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமரி பகவதி அம்மன் திருவிழாவில், இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேஷியா சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதில் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், அம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கோயிலைச் சுற்றி பவனி வந்தபோது ஒரு டன் அளவிலான தாமரை, கொழுந்து, மரிகொழுந்து, மல்லி, பிச்சி என ஐந்து வகை மலர்களை தூவி வழிபட்டனர்.

அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழா

மேலும் படிக்க: தடை செய்யப்படுகிறதா அஜினோமோட்டோ - அதன் பின்னணி என்ன?

Intro:கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 5 ம் நாளான இன்று இலங்கை பக்தர்கள் ஒரு டன் அளவிலான ஐந்து வகை மலர்களை கூடை கூடையாக தூவி வழிபட்டனர்.Body:tn_knk_06_sreelangapakthar_navarathiri_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 5 ம் நாளான இன்று இலங்கை பக்தர்கள் ஒரு டன் அளவிலான ஐந்து வகை மலர்களை கூடை கூடையாக தூவி வழிபட்டனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு பிரசித்திபெற்ற கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில்,
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த 30ம் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 5ம் நாளான இன்று அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேஷியா சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் அதிகப்படியான பக்தர்கள் உள்ளனர்.
இன்று இலங்கை பக்தர்களான செந்தில்வேள் மற்றும் அவருடன் வந்த இலங்கை பக்தர்கள் ஒரு டன் அளவிலான தாமரை, கொழுந்து, மரிகொழுந்து, மல்லி, பிச்சி என ஐந்து வகை மலர்களை அம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கோயிலைச் சுற்றி பவனி வரும்போது கூடை கூடையாக தூவி வழிபட்டனர்.
ஐந்து வகை மலரை தூவி இலங்கை பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.