ETV Bharat / state

குமரியில் பரப்புரையை தொடங்கிய அமமுக வேட்பாளர்கள்

கன்னியாகுமரி: தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

ammk
ammk
author img

By

Published : Mar 13, 2021, 5:30 PM IST

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் மூன்று கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் செந்தில் முருகனும், நாகர்கோவில் தொகுதியில் அம்மு ஆன்றோவும் போட்டியிடுகின்றனர்.

இன்று சென்னையிலிருந்து கன்னியாகுமரி வந்த இருவருக்கும் ஆரல்வாய்மொழியில் வைத்து கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் புடை சூழ, வேட்பாளர்கள் இருவரும் ஆரல்வாய்மொழியில் உள்ள காமராஜர் சிலை, வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை, வடசேரியில் உள்ள எம்ஜிஆர், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி வேட்பாளர் செந்தில் முருகனும் நாகர்கோவில் வேட்பாளர் அம்மு ஆன்றோவும் தங்களது ஆதரவாளர்களுடன் தேர்தல் பரப்புரையை தொடங்கினர்.

இதையும் படிங்க: தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.