தக்கலை நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருப்பவர் டானியல். இவர் தக்கலை அருகேயுள்ள பிளம்பிங் கடையில் சில பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது வாங்கிய பொருளுக்கு காசு கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் கடைக்காரருக்கும் டானியலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், தனது நண்பரான நகர எம்ஜிஆர் மாணவரணி செயலாளர் படையப்பா (எ) பிரதீப்பை அழைத்துச் சென்றும், பிளம்பிங் கடைக்காரரை டானியல் அடித்து உதைத்துள்ளார். இந்த தாக்குதல் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனினும், இது தொடர்பாக கடைக்காரர் காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை.
ஆளுங்கட்சியினர் என்பதால் அவர் புகாரளிக்க அஞ்சுவதாக கூறப்படுகிறது. எனவே, ’உயர் அதிகாரிகள் கண்ணில் படும்வரை சிசிடிவி தாக்குதல் காட்சிகளை பரப்புங்கள்’ என்ற வாசகத்துடன் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: குமரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - போலி சுகாதார ஆய்வாளர் கைது