ETV Bharat / state

பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த காவலாளி - நடந்தது என்ன? - etv bharat tamil

Kanyakumari watchman dead: கன்னியாகுமரியில் பூட்டிய வீட்டில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையா? தற்கொலையா? என அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

a watchman died in a locked house incident at Kanyakumari
பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த காவலாளி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 1:32 PM IST

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே உள்ள கோட்டூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ்(65) இவரது மனைவி ராணி. ஜான்ரோஸ் அருமனை குஞ்சாலு விளை என்னும் பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்த நிலையில் அதே தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது அவருடன் அவரது மனைவி ராணியும் சில நாட்களாக வசித்து வந்துள்ளார். அதனையடுத்து ராணியின் கை முறிந்ததால் கட்டு போட்டபடி சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது மகன் கில்பர்ட்டுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக அவரது மனைவி ராணி நேற்று முன்தினம் (செப்.24) அங்கிருந்து கோட்டூர் கோணத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜான்ரோஸ், தனக்கு தோட்டத்தில் வேலை இருப்பதால் நிச்சயதார்த்தம் நடைபெறும் நாளன்று வீட்டுக்கு வந்து விடுகிறேன் எனக்கூறி மனைவியை வழியனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஜான்ரோஸ் நேற்று முன்தினம் மாலை வரை அக்கம் பக்கத்தினரிடம் பேசி விட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி அழைத்துள்ளனர்.

அப்போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. ஆனால் உள்ளிருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, ஜான்ரோஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி தரையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அருமனை காவல் நிலையத்திற்கும், தோட்டத்தின் உரிமையாளர் பிரசாந்துக்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அவரது மனைவி ராணியும், உறவினர்களும் பதறியடித்து கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அருமனை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று, இறந்தவரின் உடலை பார்வையிட்டனர். மேலும் நாகர்கோவிலில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் மோப்ப நாய் பிணத்தை மோப்பம் பிடித்து கொண்டு அக்கம் பக்கத்தில் சுற்றி விட்டு மீண்டும் திரும்ப வந்து படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து ஜான்ரோஸின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது ஜான்ரோஸின் மர்மமாக இறந்தது தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, யாரேனும் தாக்கியதில் இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடந்தி வருகிறது.

இந்த சம்பவத்தால் மகனுக்கு நேற்று நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது. மேலும் பூட்டிய வீட்டில் காவலாளி பிணமாக கிடந்த சம்பவம் கோட்டூர் கோணம் பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சென்னை வில்லிவாக்க கொள்ளை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. கூலிப்படையை ஏவிய உறவினர்கள் கைது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.