குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வாடகை வீடு எடுத்து வெளிமாவட்ட பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திவருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள அந்த வீட்டில் காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடத்திவந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜெபிஸ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ஆகிய புரோக்கர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மற்றும் மூன்று பெண்கள் என ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு மாதங்களாக சேலம், நாகப்பட்டினம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளம் பெண்களை குமரிக்கு வரவழைத்து அவர்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் மூதாட்டியிடம் பணம் பறித்த கும்பல்!